எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் எல்ல மற்றும் பசறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், காலி- நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை – புளத்சிங்கள பிரதேசத்தை அண்மித்துள்ள பகுதிகளுக்கும், கண்டி மாவட்டத்தில் கங்கவட்ட கோரள, ஹரிஸ்பத்துவ, யட்டிநுவர, தொலுவ மற்றும் கங்க இஹல கோரளய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹூப்பிட்டிய, மாவனெல்லை மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தில் ரத்தொட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – கஹவத்த, இம்புல்பே, இரத்தினபுரி, வெலிகேபொல மற்றும் கலவான ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமலை வாகன விபத்தில் இரானுவ சிப்பாய் ஸ்தளத்தில் பலி- சாரதி தப்பியோட்டம்

Leave a Reply