நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் – லிட்ரோ நிறுவனம்

நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4 ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் நேற்ற கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து, தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply