நாட்டில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளனர்.

இலங்கைக்கு அண்மையாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியது.

இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 11 மாவட்டங்களில் 1451 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 821 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்கலுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 03 வீடுகள் முழுமையாகவும், 410 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply