திருகோணமலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது, நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையிலும், முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடனும் இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருகோணமலை குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் , நேற்று (02) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும், திரு. ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நண்பகல் 1.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற்றது.
சாதகமான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் மாணவர்களைப் பொதுப்பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்காக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை






