‘அது ஓர் இரகசியம்’ வரவு- செலவு திட்டம் குறித்து பசில் கருத்து

நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என ஊடகவியலாளர்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வினவியுள்ளனர்.

கேள்வி: அமைச்சரே, அறிமுக பட்ஜெட் பற்றி சிலவார்த்தைகள் கூற முடியுமா?

பதில்: ‘அது ஓர் இரகசியம்’

கேள்வி: இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் என்ன பெறுகிறார்கள்?

பதில்: வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்குப் பதிலாக, பொதுமக்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருகின்றது. 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலை சுமார் 950 ரூபா முதல் 1,000 ரூபா வரை இருந்த நிலையில், ஒக்ரோபர் 11 ஆம் திகதி 1,098 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

ஆனால் இன்றும் பல பகுதிகளில் சீமெந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கட்டுமான
தொழிலாளர்கள் மட்டுமன்றி, சீமெந்து கற்கள், பூந்தொட்டிகள், தோட்டம் அமைக்கும் பொருள்கள்
உற்பத்தி செய்பவர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, சீமெந்து நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோரி குளியாப்பிட்டியில்
கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply