இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடமை புரியும் இராணுவ வீரர்களுக்கு பலாலி இராணுவ தலைமையகத்தில் விசேட உரையும் ஆற்றியுள்ளார்.
அத்துடன், பலாலியில் இராணுவத்தினரால் சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,; இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்பட்ட 5 தொன் சேதன பசளையை விவசாயிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், முன்னாள் போராளி ஒருவருக்கு இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கு அடிக்கல் நாட்டவுள்ள நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஏற்கனவே, இராணுவத்தினரால் வறிய குடும்பம் ஒன்றுக்காக அமைக்கப்பட்ட வீட்டை கையளிக்கவுள்ளதோடு, வலி வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற தென்னை செய்கையின் ஒரு அங்கமாக இன்று இராணுவ தளபதியால் தென்னை மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்படவுள்ளது.
குறித்த விஜயத்தில், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.






