ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்!

ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றCOP26 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார்.

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்ற கோப்-26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் ஊடாக இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி பல உலகத் தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply