விஷேட அதிரடி படையினரால் இளைஞன் கைது!

வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை செட்டிகுளம் விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (03) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நிற்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் இளைஞர் ஒருவரின் பயண பொதியினை சோதனையிட்டனர்.

இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 506 மில்லிகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply