பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அனுபவம் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவைப் போன்ற அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இன்னும் உருவாகவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளாhர்.
மேலும், அரசாங்கக் கட்சிகளுக்கு இடையில் பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரியும். எனினும், அதனை தீர்த்துக்கொள்வதற்கான முயற்சிகள் அவசியம்.
கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் கட்சிகள் ஏனையக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது ஒரு சிறந்த சாணக்கியமாக கருதப்படவேண்டும். அரசியலில் கூட்டணி என்பது எவ்வளவு அவசியம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அனுபவம் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவைப் போன்ற அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இன்னும் உருவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






