திருமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களுடன், பெண் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பியர் போத்தல்கள் 66, பியர் டின் 49, சீல் சாராயம் 11 போத்தல்கள் என்பவற்றுடன் 36 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் பியர்கள் விற்பனை செய்யப்படுவதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனைக்கு உட்படுத்தியபோதே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை பொலிஸார் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Leave a Reply