புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்காவு வண்டியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
நோயாளரை கொண்டு சென்ற குறித்த காவு வண்டி எதிரே அதிவேகத்துடன் வந்த காருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்தில் நோயாளர்காவு வண்டி சாரதி, சுகாதார உத்தியோகத்தர், பணியாளர் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்டோர் அதிஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
எனினும், காரின் சாரதி காயத்திற்குள்ளாகி சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






