மன்னாரில் ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது!

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த, அரச பேருந்தில் சுமார் 250 கிராம் எடை கொண்ட ஐஸ் ரக போதைப் பொருளை மறைத்து வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், மற்றும் சிலாவத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2 நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி மன்னார் நகரின் பிரதான வீதி பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த பேருந்தில் சோதனைகளை மேற்கொண்டபோது, குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் பின், மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply