தீபாவளி பண்டிகையை மிக எளிமையாக கொண்டாடிய தமிழ் மக்கள்

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் தத்தமது வீடுகளில் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, மக்கள் நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுகக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னிநாதர் சுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் தீபாவளி விஷேட பூகைகள் இடம்பெற்றன.

கொரோனா தொற்றின் காரணமாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசங்களை அணிந்த வண்ணம் மக்கள் வருகைத் தந்ததோடு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தீபாவளி கொண்டாட்டம் ஒரு இக்கட்டன நிலையில் காணப்பட்டது.

இந்த ஆண்டு ஓரளவுக்கு சுமூகமான நிலைக் காணப்படுவதால் மக்கள் மிக மகிழ்ச்சியோடு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

Leave a Reply