தேசிய மரபுரிமைகள் மற்றும் அரும்கலைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க வவுனியாவிற்கு இன்று விஐயம் செய்ததுடன் வவுனியா மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்திருந்தார்.
இன்று (04) காலை 11 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் முதன்மை அதிதியாக தேசிய மரபுரிமைகள் மற்றும் அருங்கலைகள் அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க கலந்துகொண்டதுடன், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுரமனதுங்க, மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.






