தம்பலகாமத்தில் மரமுந்திரிகை பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிராந்திய அலுவலகமான மரமுந்திரிகை விற்பனை நிலையத்தை இன்று (04) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கரும்பு சோளம் மரமுந்திரிகை மிளகு கருவாய் கராம்பு வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன்தர்சன பாண்டிகோராள தலைமையில் இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள ,மரமுந்திரிகை கூட்டுத் தாபனத்தின் தலைவி சட்டத்தரணி சாரங்க ரத்நாயக்க, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி,தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply