இரசாயன உரப்பயன்பாடு தொடர்பில் அரசாங்கம் பொய்யுரைக்கிறது! மரிக்கார் எம்.பி

இரசாயன உரப்பயன்பாடு தொடர்பில் விசேட நிபுணர்கள் அரசாங்கத்தை பொய்களைக் கூறி குழப்பியுள்ளனர். இரசாயன உரத்தைப் பயன்படுத்தும் நாடுகள் தொடர்பில், கூகுள் தேடுப் பொறியை தட்டினால் உண்மை நிலவரம் என்வென்பது தெரியவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மேலும், எமது நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உரப்பிரச்சினை தொடர்பில் சமூகத்துக்குக் கூறப்பட்டுள்ள பொய்கள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது.

ரஜரட்டை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இரசாயன உர பயன்பாடு காரணமாக சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நூற்கு நூறு சதவீதம் காபனிக் உரப்பயன்பாட்டுக்கு மாறுவதாக இந்த அரசாங்கம் கூறியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் பார்க்கும்போது இது முற்றிலும் பொய்யான விடயம் என்பது தெளிவாகின்றது.

இரசாயன உரத்;தைப் பயன்படுத்தும் நாடுகள் தொடர்பில், கூகுளில்; தேடினால் எந்தெந்த நாடுகள் ஒரு ஹெக்டெயருக்கு எவ்வளவு இரசாயன உரத்தை பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்ற விடயம் தொடர்பில் தெரியவரும்.

அத்துடன், அந்த நாடுகளில் சிறுநீரக நோயாளர்கள் பற்றிய விஞ்ஞானபூர்வ தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் இதற்கு முன்பு, ஒரு ஹெக்டெயருக்கு 138 கிலோகிராம் இரசாயன உரமே பயன்படுத்தப்பட்டது.

இதற்கமைவாக, மக்கள் தொகையில், சிறுநீரக நோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 23 சதவீதம் என்று புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தில் ஒரு ஹெக்டெயருக்கு 1,495 கிலோகிராம் இரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். அங்கு சிறுநீரக நோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கு 1.22 ஆகும்.

எமது நாட்டுக்கு பாம் எண்ணெயை விநியோகிக்கும் மலோசியா நாட்டை எடுத்துக்கொண்டால், அங்கு ஒரு ஹெக்டெயருக்கு 2,100 கிலோகிராம் இரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். அங்கு சிறுநீரக நோயாளர்களின் மரணவீதமானது ஒரு இலட்சத்துக்கு 15 சதவீதமாகும்.

பூட்டானே, இரசாயன உரத்தை மிகவும் குறைவாக பயன்படுத்தும் நாடாகக் கருதப்படுகிறது. அங்கு ஹெக்டெயருக்கு 35 கிலோகிராம் இரசாயன உரத்தைப் பயன்படுத்துகின்றனர். எனினும் அங்கு ஒரு இலட்சத்துக்கு 25 சதவீதமே மரணங்கள் பதிவாகின்றன.

எமது இந்த அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ள விசேட நிபுணர்கள் பாரிய பொய்களைக் கூறியுள்ளமை இந்தப் புள்ளிவிவர தகவல்களினூடாக தெரிகிறது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply