யாழில் வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இராணுவத் தளபதி!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும், இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என சவேந்திர சில்வா, ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply