திருமலையில் வீட்டில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை, தம்பலகாமம், உல்பத்வௌ பகுதியில் வீடொன்றில் இருந்து இன்று ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய டபிள்யூ.ஏ.நளீன் சமிந்த என்பவரே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர் இரண்டாவது மனைவியுடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்திருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்;.

உயிரிழந்தவர் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டின் பெயரில் ஆறுமாதம் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply