யாழ்ப்பாணத்தில் கஞ்சா, வாள் மற்றும் போதைவஸ்து மருந்துப் பெட்டிகளுடன் இருவர் இன்று யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களே இ;வ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







