முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை அடையாளப்படுத்தி வீடுகளை தெரிவு செய்தது நான்! அங்கஜன்

முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை அடையாளப்படுத்தியதும், அவர்களுக்கு வீடுகளை தெரிவு செய்தது நான் எனவும், கோப்புகளை இறுதி நேரத்தில் கொடுப்பதால் அவர்கள் சந்தோசப்படப் போவதில்லை எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வுகளை வேண்டுமென்றே நீங்கள் புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. அந்த செய்தி உண்மையானதா என அங்கயன் இராமநாதனிடம் ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதிலளித்த அங்கஜன் இராமநாதன்,

நேற்று இடம்பெற்ற நிகழ்வு நேற்று; ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது ஒன்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முதல் அதாவது முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை அடையாளப்படுத்தியது நான். அவர்களுக்கு வீடுகளை தெரிவு செய்தது நான். தேவைப்பாடுகளை தெரிவு செய்ததுநான்.

அந்த வேலைத்திட்டங்களை நான் செய்தேன் அதில் எனக்கு சந்தோசம். அவர்களிற்கு இறுதியில் கோப்பு கொடுப்பதில் மாத்திரம் சந்தோசம் வராது. அவர்களிற்கு முழுமையான வேலைத்திட்டத்தை செய்துவிட்டேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கு நான் போகாவிட்டாலும் பiவாயில்லை.

ஆனால், இன்று எங்களுடைய உரிமை சார்ந்த விடயம். எங்களுடைய மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய விடயம். ஆகவே, கட்டாயம் வர வேண்டும்.

அடை போட்ட ஊடகம், அதில் பச்சோந்தி பத்திரிகையாளர் அதனை எழுதியிருக்கின்றார். அவருக்கும் அந்த பத்திரிகை விற்க வேண்டுமானால் எம்மைப் பற்றிய செய்தி வந்தால்தான் விற்கும் என்றால் அவர் தொடர்ந்து செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீண்ட காலமாக எமது மக்கள் ஆசைப்பட்டு ஏங்கிக்கொண்டிருக்கின்ற இந்த விடயம் இன்று நிறைவேறியிருக்கின்றது. எமது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நேரில் வந்து வடக்கு பிரதேசத்தில் இருக்கின்ற தொல்பியல் சின்னங்களை மரபுரிமை சின்னங்களை பேணிப்பார்ப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதில் குறிப்பாக ஒரு விடயத்தை சொல்ல முடியும். இந்த விடயத்தை கேட்டது நாங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில். குறிப்பாக நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்ற தருவதாக சொன்னவர்கள். இன்றைக்கு எங்களது மரபுரிமைகளைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக போய்விட்டார்கள்.

ஆனால், எவரும் எதிர்பார்க்காத இந்த அரசாங்கம். இன்று எங்களுடைய மரபுரிமைகளையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக இந்த அரசாங்கத்திற்கும் அமைச்சருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் ஒருசில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது. அதனை தடுப்பதற்கு இந்தமாதிரியான நடவடிக்கைகள் அதாவது அவர்கள் இங்கு நேரடியாக வந்து கோவிலை கட்டிக்கொடுப்பது உண்மையில் ஒரு முனேற்ற நடவடிக்கை. அதற்கு நிச்சயமாக நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply