புத்தளம் கடற்பரப்புக்குள் மஞ்சளுடன் வந்த இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

புத்தளம் கடற்பரப்புக்குள் மஞ்சளுடன் உள்நுழைந்த இந்திய மீனவர்கள் ஐவரைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் மஞ்சள் தட்டுப்பாட்டையடுத்து தமிழகத்திலிருந்து மஞ்சள் கடத்தும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று தமிழகத்தில் இருந்து ஒரு நாட்டுப் படகில் கடத்தி வரப்பட்ட 3,400 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஐவரும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழகம், தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply