இளவாலையில் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இருந்து வாகனத்தில், 2 கிலோ கேரளக் கஞ்சா கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சாவை கடத்திச் சென்ற வாகனத்தை துரத்திச்சென்ற பொலிஸார், தெல்லிப்பழை சந்தியில் வைத்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

மேலும், பொலிஸ் நிலையத்தில் வைத்து வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சூட்சுமமான முறையில் கஞ்சா பொதி மறைத்து வைக்கப்பட்டது.

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவுக்கு கஞ்சாவை வாங்கி சென்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply