அராலியில் விபத்து: ஒருவர் படுகாயம்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி செட்டியார் மடம் சந்தியில் இன்று இரவு 7 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

துணைவியிலிருந்து செட்டியார் மடம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன், செட்டியார் மடம் சந்தியால் திரும்பிய முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து முச்சக்கர வண்டியின் சாரதி தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply