இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு தொடர்பான கணக்கெடுப்பில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுவாசப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதம் வரையில் ஏற்பட்ட மொத்த கொரோனா இறப்புகள் தொடர்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, செப்டெம்பர் நடுப்பகுதியில் 11699 உயிரிழப்புகள் தொடர்பில் கணக்கெடுக்கப்பட்டன.
இதில் 714 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ் எண்ணிக்கை 6.01 வீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பல்வேறு உடல் நல பிரச்சினைகள் காணப்பட்டுள்ளதோடு, தொற்றா நோய் உள்ளவர்கள் தடுப்பூசிகளை பெற்ற போதிலும் உடல் நல பாதிப்புக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






