அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் என்பன இணைந்து இப் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம், இன்று பிற்பகல் நாவலவில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்திற்கு எதிரில் நடத்தப்படவுள்ளது.
அதிபர்- ஆசிரியர் சம்பள பிரச்சினைக்காக, நிபந்தனை அற்ற அடிப்படையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9ஆம் திகதி தேசிய போராட்ட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






