அறிகுறி தென்படாத தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாத நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை, அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றாது ஏனைய தரங்களில் கற்கும் மாணவர்ளுக்கும் பாடசாலைகளை ஆரம்பிப்பது உசிதமானதல்ல.

இவ்வாறு மீண்டும் செயற்பட்டால் கொரோனா தொற்றுப் பரவுகை ஏற்படக்கூடும்.

நாட்டில் அதிகளவான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட போதிலும், பாடசாலை சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படாமையினால் சுகாதார வழிகாட்டல்களை கிரமப்படுத்தி அமுல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், அண்மைய நாட்களில் தொற்றாளிகளின் எண்ணிக்கையில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும், நோய் அறிகுறி தென்படாத தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை ஆபத்தானது- என்றார்.

சுமந்திரன் குழுவை அழைக்கிறது அமெரிக்கா.! பத்து நாட்களில் வொஷிங்டனில் பேச்சு: இராஜதந்திரக் குழப்பத்தில் கொழும்பு

Leave a Reply