ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்கள் மீது விசாரணை!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவருடைய தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்தத் தொலைபேசி இலக்க விவகாரத்தின் அடிப்படையில் 20 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கவனம் செலுத்தினர்.

அதன் அடிப்படையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் சுமார் 20 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply