வவுனியா, கல்லாற்றுப்பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாறுப்பாலத்தில் இடம்பெற்றது.
மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறுப்பாலத்தில் ஏறி செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகினர்.
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றைய ஒருவர் பாலத்தின் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
முருங்கன் பரியாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பிரான்சிஸ் கண்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.






