வீட்டை உடைத்து 28 இலட்சம் ரூபா பெறுமதியான நகை திருட்டு!

மட்டு. ஏறாவூர், மைலம்பாவெளி பகுதியில், பூட்டிய வீட்டை உடைத்து அங்கிருந்த 28 இலட்;சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் உட்பட 4 பேர் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மதியம் 1 மணியளவில் வீடுதிரும்பியுள்ளனர்.

அப்போது, பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறை கதவை உடைத்து அறையில் இருந்த அலுமாரியை உடைத்து, அங்கிருந்த 6 இலச்சம் ரூபா பணம் மற்றும் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து, பொலிஸார் மேப்ப நாய் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply