முல்லைத்தீவில் மணல் கொள்ளை: சந்தேகநபருக்கு எதிராக வழக்கு பதிய பொலிஸார் பின்னடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சிலாத்தை தெற்கு தியோகுநகர்ப் பகுதியில் மணல் கொள்ளை இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பகுதியில் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட டிப்பர் வண்டி மணல், ஊரடங்கு சட்டம் நிலவியபோது ஏற்றப்பட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும், நேற்று மணல் அகழ்ந்து கொண்டிருந்தபோது, கிராம சேவகரால், ஜே.சி.பி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் என்பதனால் கிராம சேவகரால் பிடித்து ஒப்படைக்கப்பட்ட ஜே.சி.பி சாரதி மீது வழக்குப் பதிவு செய்ய பொலிசார் பின்னடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply