விலைக் கட்டுப்பாடு பற்றிய கொள்கை இருக்கவேண்டும்!

“விலைக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தனது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டுமெனின், அரசாங்கம் விலைக் கட்டுப்பாடு தொடர்பான கொள்கையொன்றைக் கொண்டிருக்க வேண்டும்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பொருள்களின் விலை, நூல் அறுந்த பட்டம் போல உயர்ந்து வருகின்றது. பொருள்களின் விலையில் கட்டுப்பாடு இல்லையென்றால், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்துக்குள், மீட்க முடியாத சோகமான இடத்துக்கு நாடு தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாது.

விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதன் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. தற்போது விவசாயிகள் தமது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தும் சீனி, மா மற்றும் எரிவாயு போன்ற பெரும்பாலான பொருள்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுமையான நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. – என்று தெரிவித்தார்.

Leave a Reply