சப்புகஸ்கந்த வீதிக்கு அருகில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று பெண்ணின் கணவர் மற்றும் 2 பிள்ளைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 10 ரம்யா பிரதேசம், மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த, 42 வயதுடைய மொஹமட் சாசி மும்டாஸ் என்ற பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்தப் பெண் தனது மருமகளுடன் முச்சக்கர வண்டியில் மாளிகாவத்தை பிரதேசம் நோக்கி சென்றுள்ளார்.
அன்று முதல் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாமையால் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, முச்சக்கர வண்டியில் சென்ற மற்ற பெண்ணிடம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவராகும். எனினும் தான் மோதரை பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி நடந்து சென்றதாக மருமகள் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தின் உண்மை தகவலை அறிய பொலிஸார் சிசிரிவி காட்சிகளை சோதனையிட்ட போது அதில் அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் கடுமையாக சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்தார் எனவும், காணாமல் போன தினத்தன்று காலை சூதாட்டக்காரர்களுடன் அவர் இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சடலம் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.







