அரிசி களஞ்சியப்படுத்தும் தாங்கி வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

அனுராதபுரம், நொச்சியாகம, ஹிரியாலேகம பிரசேத்தில், அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கி வெடித்ததில், அரிசி மூடைகளுக்குள் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

ஹிரியாலேகம, நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

இப் பெண், கோழித் தீவனம் உற்பத்தி செய்யப்படும் இடத்தில், 12 அடி உயரத்தில் அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கி வெடித்ததில், அரிசி மூடைகளுக்குள் சிக்குண்டுள்ளார்.

இதையடுத்து, காயமடைந்த பெண்ணை உடனடியாக மீட்டு, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply