கிளிநொச்சி, கனகபுரம் உட்கட்டமைப்பு வீதி, இன்று பிற்பகல் 3 மணியளவில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
பெருந்தெருக்கல் அமைச்சின் கிராமிய மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 48.51 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் காபெற் வீதியே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகாரா சபையால் நிர்மாணிக்கப்பட்ட இவ் வீதி, கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமானதாகும்.
நாடளாவிய ரீதியில் கிராமிய வீதிகள் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ச தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.









