கிணற்றில் மூழ்கி 18 வயது இளைஞன் பலி! சுழிபுரத்தில் சம்பவம்

சுழிபுரம், திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீரிழ் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டை, மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு குறித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் நீராடுவதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது, திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

மூளாய் வைத்தியசாலையில் இருந்து, குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply