பாடசாலை மாணவர்களுக்கு முறையான சுகாதார வழிகாட்டுதல் தேவை!

பாடசாலை மாணவர்களுக்கு முறையான சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என கொழும்பு ரிஜ்வெ சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், வகுப்பறைகளில் உணவு உண்ணும்போதும் நீர் அருந்தும்போதும் மாணவர்களை தனித்தனியாக இருக்க செய்வதற்கு ஆலோசனை வழங்குமாறே அதிபர், ஆசிரியர்களிடம் விசேடமாக கோரிக்கை விடுக்கின்றேன்.

வகுப்பறைகளில் மாணவர்கள் ஒன்றாக இருந்து உணவு உண்ணும்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு உள்ளாவது தெரியவந்துள்ளது.

விசேடமாக வகுப்பறைகளில் அல்லாது வேறு ஓர் அறையை மாணவர்கள் உணவு உண்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்தால் அது மிகவும் சிறந்தது. உணவு மற்றும் குடிநீரை பகிர்ந்துக்கொள்வதை மாணவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பாடசாலைகளை மீளவும் மூடாத வகையில், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply