யானையால் குடிசை வீடுகளும், வீட்டுத்தோட்ட பயிர்களும் சேதம்!

மட்டக்களப்பு, எல்லைக் கிராமமான ரிதிதென்னை பிரதேசத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகுந்த யானையால் குடிசை வீடுகளும், வீட்டு தோட்ட பயிர்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

காட்டுப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் இன்று புகுந்த யானை குறித்த பகுதியில், மூன்று குடிசைகளை உடைத்து, வீட்டுப் பாவனைப் பொருட்களை சேதமாக்கியுள்ளதுடன், வீட்டுத் தோட்ட பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இப் பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும், யானை தொல்லையில் இருந்து எங்களது உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம், யானை மின்சார வேலிகள் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply