அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் எவரும் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் இவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் எவரும் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல. அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
கொரோன தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தற்கு அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது, மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிடவில்லை.
மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடாக வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது.
வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு சந்தையில் போட்டித்தன்மையான சூழல் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது பயனற்றது.
பொருட்களின் விலையை நிர்ணயித்தால், சந்தையில் பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும். எதிர்பார்க்காத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்.
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு காணப்படுகிறது.
மின்பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் மின்விநியோகிப்பது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதான இலக்காகும்;. ஆனால், தற்போது யுகதனவி விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது.
இதனை விமர்சிக்கும் அமைச்சர்கள், தொடர்ந்தும் அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள், மோசடியான அரசாங்கத்தில் ஏன் இன்னும் அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள்.
தாராளமாக பதவிகளை துறந்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். அதனை விடுத்து அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது தவறான அரசியல் செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.






