வடமராட்சியின் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக 15 இற்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 45 இற்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பாமை தொடர்பில் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சியின் கடற்பரப்பும் கடும் காற்றுடன் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.
இன்று அதிகாலை மீன்பிடிக்க பருத்தித்துறை, முனை உட்பட்ட பகுதிகளிலிருந்து 15 படகுகளில் சென்ற 45 இற்கும் அதிகமான மீனவர்கள் இன்று நண்பகல் வரையில் கரை திரும்பவில்லை என கவலை தெரிவித்துள்ள மீனவர்களின் உறவினர்கள் கடற்கரைகளில் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
வழமையாக காலை 8 மணியளவில் அவர்கள் கரை திரும்புவது வழக்கம் என்றும், கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் அச்சமாக உள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.






