ஊற்றுப் புலம் கிராமத்தில் தனி தீவாக 90 குடும்பங்கள் சிக்கவுள்ள நிலையில், அவசர நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ள இடத்தை மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியை பார்வையிட்டனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், குறித்த வீதியூடான வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாக குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.








