காலி – போப்பே பிரதேச சபைக்கு எதிர்ப்பை தெரிவித்து, பெண்ணொருவர் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டுள்ளார்.
போப்பே போத்தல பிரதேச சபையின் கண்காணிப்பு கூரையின் மீதேறியே, இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
பிரதேச சபையினால் வடிகான் சுத்திகரிக்கப்படாமையினால் தாம் குடியிருக்கும் வீடானது மழை காலத்தில் வெள்ளநீரில் மூழ்குவதாக தெரிவித்தே அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண், உளுவிட்டிகே பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கடும் மழையையும் பொருட்படுத்தாது கண்காணிப்பு கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






