காரைநகரில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

யாழ்ப்பாணம்-காரைநகர், கோவளம் கடற்பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இன்று மதியம் கடலுக்கு சென்றவர்கள் சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதோடு, உயிரிழந்து ஒரு வாரத்திற்கு மேலாகிள்ளதாக கருதப்படுகிறது.

அண்மையில் இந்த பகுதிகளில் யாரும் காணாமல் போனதாக பொலிஸ் பதிவுகள் இல்லாததால், இந்தியாவை சேர்ந்தவர்களின் சடலமாக இருக்கலாமா என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

Leave a Reply