யாழ், வடமராட்சி கடற்பரப்பில் கடும் கடற்கொந்தளிப்பு நிலை காணப்படுவதனால் கடற்றொழில் நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.
யாழ். மாவட்டத்திலும் கடந்த 24 மணிநேரத்தில் காற்றுடன் கூடிய மழைபொழிவு இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு முதல் தொடர்ச்சியான மழை பொழிவு இடம்பெற்றுள்ளதுடன், கடற்பிரதேசங்களில் பலத்த காற்று வீசிவருகிறது.
இதனால், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி கலங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவற்றை பாதுகாப்பாக கரை பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வடமராட்சி கடற்பகுதியில் உள்ள மீனவர்கள் முற்றாக தமது கடற்றொழில் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர்.
இதனால், பல ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







