நாடாளுமன்றத்திற்குள் கைக்குண்டு, துப்பாக்கி போன்றவை கொண்டுவருவதற்கான அச்சுறுத்தல்கள் ஏதும் உள்ளதா என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று தனது அமர்விடத்தில் இருந்த ஆவணம் ஒன்றை காட்டி அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களை உடல்சோதனை செய்ய ஏற்பாடுகள் இருப்பதாக கூறிய சரத் பொன்சேகா, உலகில் தொழிநுட்ப வளர்ச்சி கண்டுள்ள நிலையில், உடலை தொட்டு சோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமை ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏதேனும் அச்சுறுத்தல், புலனாய்வு தகவல்கள் இருந்தால் கூறுமாறு சரத் பொன்சேகா கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் தினேஸ் குணவர்த்தன இதுகுறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறியுனார்.






