ஐவரை காவு கொள்வதற்கு ஊற்றப்பட்ட பெட்ரோல்!

ஐந்து உயிர்களைக் காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவத்துக்குஇ பெட்ரோல்இ பயன்படுத்தப்பட்டுள்ளது என அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விவகாரம் தொடர்பிலான வழக்கு வலப்பனை நீதிமன்றத்தில் (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதேஇ இராகலை பொலிஸார்இ மேற்படி இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் 2021 ஒக்டோபர் 7ஆம் திகதிஇ இரவு தனி வீடு தீ விபத்து சம்பவம் இடம்பெற்றது.

இச் சம்பவத்தில் குறித்த குடும்பத்தை சேர்ந்த தங்கையை இரவீந்திரன் வயது (27) என்பவர் உயிர் தப்பியிருந்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர்இ நீதிமன்றத்தின் உத்தரவின் ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்இ வழக்கு விசாரணையை எதிர்வரும் (22 ) ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply