மாஸ்க் அணியாத இருவருக்கு ரூ. 22,500 அபராதம்!

முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு நேரம் நடமாடிய இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்தது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்.

கொரோனா ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த சமயத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய ஒருவரும்இஊரடங்கு சட்டத்தை மீறியும், முகக் கவசம் அணியாமலும் பொது இடத்தில் நின்ற மற்றொருவரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கில் இருவரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து முகக் கவசம் அணியாத நபருக்கு 7ஆயிரத்து 500ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

முகக் கவசம் அணியாததுடன் ஊரடங்கு சட்டத்தையும் மீறி நடமாடிய நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை.

Leave a Reply