பதுளையிலிருந்து கண்டி நோக்கி இன்று பயணித்த ரயில், ஹாலிஎல மற்றும் உடுவர ரயில் நிலையத்துக்கு அருகில், 177ஆம் கிலோமீற்றர் பகுதியில் தடம்புரண்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 6.10 மணியளவில் ரயில் தடம்புரண்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தண்டவாளம் வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதால் ரயில் தடம்புரண்டதாக ரயில் செலுத்துநர் சிறில் விக்ரம லியனகே தெரிவித்துள்ளார்.






