நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கம் உணவு பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை எழுப்பி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இரசாயன பசளை சம்பந்தமாக எடுத்த விஞ்ஞானப்பூர்வமற்ற தன்னிச்சையான தீர்மானம், முக்கியமான பல துறைகளை பாதித்துள்ளது.
ஏற்றுமதி பயிர்களுக்கு இருந்து வந்த நற்பெயர் இதன் ஊடாக அழிந்து வருகிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.






