குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! பிரதான நபர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தையைச் ​சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில்இ சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜோடியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர்இ அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே பிரதான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ப​டுகொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உலக்கைஇ சடலத்தை எடுத்துச் சென்ற ஓட்டோ உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்டஇ பெண் அணிந்திருந்த நகைகளில் தங்க சங்கிலிஇ இரண்டு தோடுகள்இ தங்க மோதிரம் சந்தேகநபரான பெண்ணினால்இ கொழும்பு ஹெட்டி வீதியில்இ தங்க நகைக்கடையில் 1 இலட்சத்து 69 ஆயிரத்துக்கு விற்றப்பட்டுள்ளது.

அந்த நகைகள் யாவும் உருக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயேஇ இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply