மன்னாரில் கடந்த எட்டு நாட்களில் 154 பேருக்கு கொரோனா!

மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 2547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வருடம் மன்னாரில் 2,530 கொரோனா தொற்றாளர்களும், தற்போது வரை 2,547 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply